Breaking News

நல்ல பால் வழங்குவோருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் துவக்கம்!

நல்ல பால் வழங்குவோருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நாளை முதல் துவங்க உள்ளோம் -மதுரையில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.*


மதுரை ஆவின் தொழிற்சாலையில் எட்டு மாவட்டங்களை சார்ந்த ஆவின் அலுவலர்களுக்கான பயிற்சியை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ;-

ஆவினில் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன் மேம்பாடு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.,கடந்த நான்கு மாதங்களாக எடுத்துள்ள முயற்சி நல்ல பலனை அடைந்துள்ளது.

பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்பது சித்தரிக்கப்பட்ட தகவல். தனியார் உற்பத்தியாளர்கள் போட்டியை முறியடிக்க முடியும்.

தற்போது தீவிரமாக கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வசதிகள், பராமரிப்பதற்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பணிகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாதம் பல்லாயிரக்கணக்கான கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்க உள்ளோம்.

உலக அளவில் பார்த்தோமானால் கால்நடை வளர்ச்சி மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. நாளைய தினம் இரண்டு திட்டங்களை துவக்கி வைக்க உள்ளோம்.

நல்ல பால் வழங்குவோருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நாளை திண்டுக்கல்லில் துவங்க உள்ளோம்.

ஆவினை பொருத்தவரை குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது.
எங்களுடைய லஞ்ச ஒழிப்புத் துறையினர் எங்கு தவறு நடக்கிறது, என்பதை கண்டுபிடித்து அதை எந்த சட்டத்தில் தண்டனை வழங்க வேண்டும் என அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே நெய் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் அதற்கான உற்பத்தியை தொடங்கி தாராளமாக வழங்கப்படும். ஆவினில் சென்ற மாதத்தில் எட்டு சதவீத விற்பனை உயர்ந்துள்ளது. படிப்படியாக உயர்ந்து வருகிறது.

எனது வீடு திறந்தே தான் இருக்கும், பால் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதனை கடிதம் மூலமாகவோ, நேரில் வந்தோம் என்னை தொடர்பு கொள்ளலாம் தீர்வு காணப்படும்..

About neWsoFtTAmilNADu

Check Also

சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம்.நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது …