Breaking News

தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி 5 வது நாள் தொடர் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், உத்தன்ன பள்ளியில் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்தால் அமைக்கப்பட உள்ள ஓசூர் – 5 வது தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி நடைபெற்று வரும் 25 வது நாள் காத்திருப்பு போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கலந்து கொண்டது*
—————————————-

உழவர் உறவுகளுக்கு,,

இன்று (29-01-2023) கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், உத்தன்ன பள்ளியில் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட உள்ள ஓசூர் 5-வது தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி நடைபெற்று வரும் 25 வது நாள் காத்திருப்பு போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பெருந்திரளாக கலந்து கொண்டு போராடும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

ஓசூர் மாநகரை சுற்றி இதுவரை தமிழ்நாடு அரசால் 4 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு 6000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பாதிக்கு மேல் பயன்படுத்தப்படாமல் உள்ளது, ஆனாலும் 5 -வது தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது.

GMR நிறுவனத்திடம் உள்ள 1800 ஏக்கர் நிலத்துடன், மிகச் சிறப்பாக காய்கறிகள், மலர்கள், கீரை வகைகள், தக்காளி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண்மைக்கு பெயர் பெற்ற இடத்தை அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்த்து, வட இந்தியர்களை தமிழ்நாட்டில் குடியேற்றுவதற்காக தமிழ்நாடு அரசு விளை நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை செய்து வருகிறது.

பாதிக்கப்பட உள்ள உழவர்கள் சார்பில் கடந்த ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டதை போல் GMR நிறுவனத்தின் 1800 ஏக்கர் இடத்தில் மட்டுமே தொழிற்பேட்டையை அமைக்க கோரியும், விளை நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக் கோரி 25 நாளாவதாக காத்திருப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இரண்டாவது முறையாக இன்று 25வது போராட்ட நாளில் கலந்துகொண்டு உழவர் உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்காக அனைவரையும் ஒன்று திரட்டி கோரிக்கை மாநாடு மற்றும் சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட உழவர்கள், ஒத்த கருத்துடைய அமைப்புகளை திரட்டி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

போராட்டக் களத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உழவர் போராளிகள் சத்திய நாராயணன், பாலசுப்பிரமணியம், வேலு, எல்லப்பன், சிதம்பரம், நாகராஜ், நெற்குணம் ஆகியோருக்கு பச்சை ஆடை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

இன்றைய போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சங்கத்தின் நிறுவனர் – வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, பொதுச் செயலாளர் – சு.முத்துவிஸ்வநாதன், மாநில மகளிர் அணி செயலாளர் – முத்துலட்சுமி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவை தலைவர் – ராமன், மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் – தீபா, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் – பிரேமாவதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் – விஸ்வநாத் ,மாவட்ட கெளரவத் தலைவர்- முனிராஜூலு, சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் – வெங்கடேஷ், தளி தெற்கு ஒன்றிய செயலாளர் – கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் – நாராயணன், ஓசூர் தெற்கு ஒன்றிய அவை தலைவர் – நாகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜு, சங்கரப்பா கவுடு, மஞ்சுளா, தளி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் – லோகேஷ், கெளரவத் தலைவர் – நாராயணன், முன்னோடி உழவர்கள் சீனிவாசலு, வெங்கட்ராஜ் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் ஆகியோருடன் 50க்கும் மேற்பட்ட சங்க உழவர்களுடன், பாதிக்கப்பட்ட உழவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்படிக்கு.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட குழு*
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்*

About neWsoFtTAmilNADu

Check Also

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …