தேனி-போடி நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து பேருந்து மோதியதால் பெண் படுகாயம்! பேருந்து ஓட்டுனர் நடத்தின தப்பி ஓட்டம்!
சம்பவ இடத்தில் போலீஸ் ஒருவர் இருந்தும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டதாக குற்றச்சாட்டு!
தொடர்ந்து நடக்கும் சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து காவல்துறை
துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், தேனி-போடி நெடுஞ்சாலையில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தோப்புப்பட்டியில், தேனியிலிருந்து போடிநாயக்கனூருக்கு பொதுச்சாலையில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும், சென்ற தனியார் பேருந்து மோதி, விபத்து ஏற்பட்டதில், பெண் ஒருவர் பலத்த தலைக்காயத்துடன், 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனிசெட்டிபட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜேஷ், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுவருகிறார்.
விபத்து குறித்து அங்கிருந்த பொதுமக்கள் 108 அவசர ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தும் தேனியிலிருந்து ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததால் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி செய்ய முடியாத அவலநிலை ஏற்பட்டதாகவும்
விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்தை அதே இடத்தில் அப்படியே நிறுத்திவிட்டு அப்பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்தின் வழியாக சென்ற, மனிதநேயமில்லாத, காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் அவ்விபத்து குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்காமல் விபத்தில் பாதிக்கப்பட்டு இரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியை காப்பாற்ற குறைந்தபட்சம் 108 தகவல் தெரிவித்து இருக்கலாம்.
ஆனால் மனிதநேயம் இல்லாமல் இரக்ககுணம் இல்லாத அந்த காவலர் கண்டும் காணாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாக சம்பவ இடத்தில் கூடியிருந்த பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தேனி -போடி நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருவதாகவும், விபத்துக்களால் விலைமதிப்பில்லா உயிர்கள் பலியாகி வருவதாகவும், சாலை விபத்துக்களை தடுத்திடவும், குறைத்திடவும், முறையான, விரைவான, நடவடிக்கையினை மேற்கொண்டிட, தமிழக அரசும், தேனி மாவட்ட ஆட்சித்துறை நிர்வாகமும், தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகமும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் முன்வைக்கின்றனர். மேலும்,108 அவசர ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்திடவும், ஏற்கனவே தேனி மாவட்டத்தில் இருக்கின்ற 108 அவசர ஆம்புலன்ஸ்களை முறையாகவும், விரைவாகவும், தங்குதடையின்றி இயக்கிடவும், உறுதிப்படுத்திடவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கையினை மேற்கொண்டிட வேண்டும் என்பதே, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.