திண்டுக்கல் மாவட்டம் என்றாலே தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் திண்டுக்கல் மாவட்டம் என்றாலே இயற்கை சூழ்ந்து சுற்றி மலைகளால் காணப்படுவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் 70% விவசாயம் தான்.
30 சதவீதம்
தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் பகுதிகளில் தொழிற்சாலைகள்
நூற்பாலைகள் தோல் தொழிற்சாலைகள் தென்னை நார் தொழிற்சாலைகள் மற்ற ஏனைய தொழில் நிறைந்த பகுதிகளாக உள்ளது .மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சுற்றுலா நிறைந்த ஒரு சிறந்த மாவட்டமாக உள்ளது .திண்டுக்கல் சுற்றியுள்ள பகுதிகளில்
டாஸ்மாக் மதுபான கடைகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை விற்பனை நடந்து வருகிறது . இந்த
டாஸ்மார்க்கடையுடன் சேர்ந்து மது பானக் கூடங்களும் இருக்கின்றனர்.இந்த மதுபானக் கூடங்களில் பெரும்பாலான மதுபான கூடங்கள் அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் மதுபான கூடங்கள் என்ற பெயரில் அங்கு 24 மணி நேரமும் போலி மது பாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகவும் குறிப்பாக டாஸ்மார்க் கடை திறக்கும் வரை தாராளமாக திறந்தவெளியில் அமோகமாக விற்பனை செய்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதில் குறிப்பாக வேடசந்தூர் பகுதியில் உள்ள மோர் பாளையம் தொழிற்சாலைகளுக்கு
வேலைக்கு செல்லும் தினக்கூலி தொழிலாளிகள் மற்றும் கட்டிடத் தொழிலாளிகள் போலி மது பாட்டில்களை காலையிலேயே அதிக விலைக்கு வாங்கி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
மது போதைக்கு அடிமையாகி மது போதையில் வேலைக்கு செல்வதால் பல நிறுவனங்களில் அவர்களை வேலையை விட்டு நீக்கி விடுவதால் அந்தக் கூலித் தொழிலாளிகள் வேலையில்லாமல் மது வாங்கி குடித்துவிட்டு அவர்களது வாழ்க்கையை சீரழிப்பதும் இல்லாமல் அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் இன்றி நடுரோட்டில் சிக்கித் தவித்து வருகின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் தங்கள் கணவர்கள் மதுவுக்கு அடிமையாகி போனதால் வாழ்வாதாரம் இல்லாமல் வேதனையில் பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது . அதுமட்டுமில்லாமல் பெரும்பாலான இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாகத்துடன் கஞ்சா போன்ற போதைப் பொருள்களை பயன்படுத்தி வருவதால் மனநிலை பாதிக்கப்பட்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பாக கொள்ளை வழிப்பறி அடிதடி போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் மது கஞ்சா போதைக்கு அடிமையாகி இருக்கும் இளைஞர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது தாக்குவதும் பண்ணும் வன்முறையில் ஈடுபடுவதும் போன்ற சம்பவங்கள் அரங்கேறுவதோடு தங்கள் வாழ்வாதாரத்தையும் மாய்த்துக் கொள்கின்றனர் .
குறிப்பாக சிறுமலை அடிவாரத்தில் உள்ள நத்தம் நகர் ,சாணார்பட்டி ,கோபால்பட்டி ,செங்குறிச்சி மலை ,பகுதி மற்றும் மலை சார்ந்த பகுதிகளிலும் சிறு நகரப் பகுதிகளிலும் வேடசந்தூர் போன்ற தொழிலில் நகரப் பகுதிகள் எரியோடு பாளையம் போன்ற விவசாய பகுதிகள் வடமதுரை போன்ற தொழிலில் நகரங்களில் காலை முதலே பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் திறந்தவெளியில் போலி மது பாட்டில்கள் விற்பனை மோகமாக விற்பனை செய்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் சர்வசாதாரணமாக கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி கிடைப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
ஒரு டாஸ்மாக் பார் அரசு அனுமதி வைத்துக் கொண்டு 15 இடங்களில் தங்கள் பணம் பலத்தை பயன்படுத்தி கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்பதாகவும்
இது சம்பந்தமாக ஒரு சில மது விற்பவர்களை அணுகி விசாரித்த பொழுது காவல்துறைக்கும் மதுவிலக்கு காவல்துறைக்கும் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு தான் மது விற்பனை செய்து வருகிறோம் என்று அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர். அது மட்டுமில்லாமல்
மது விற்பனையாளர்கள் அரசு மது கடையில் மொத்தமாக சரக்குகளை வாங்கி வைத்துக் கொண்டு பொது மக்கள் கூடும் இடங்களில் சாலை ஓரம் மற்றும் காட்டுப் பகுதிகள் மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் சிறிய வீடுகளை வாடகைக்கு எடுத்து வைத்துக்கொண்டு சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனையை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
மது விற்பனை சம்பந்தமாக பொதுமக்கள் யாரேனும் மதுவிலக்கு காவல்துறை மற்றும் அப்பகுதி எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தால் அவர்களை மது விற்பனையாளர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து விடுகின்றனர் .
இதனால் பொதுமக்கள் போலி மது பாட்டில் விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் அந்த இடத்தை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் ஏனென்றால் தகவல் கொடுக்கும் நபர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா மதுபாட்டில் விற்பனை செய்யும் அவர்களால் அச்சுறுத்தல் இருப்பதாகவும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஏனென்றால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு சாதகமாக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்
இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது மது போதைக்கு அடிமையாகி மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்லாமல் சாலையிலேயே கிடக்கும் நபர்களின் குடும்பப் பெண்மணிகள் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் .பெண்களுக்காக பெண்கள் முன்னேற்றத்திற்காக , மகளிர் குழுக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்திற்கு நிறைய நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதால் திமுக அரசு மீது பெண்களுக்கு ஒரு நற்பெயர் தற்போது இருக்கிறது. முக்கியமாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் இது போன்ற நல்ல திட்டங்களால் பெண்கள் தற்போது தங்கள் கணவர்கள் மது போதைக்கு அடிமையாகி வருமானம் இல்லாமல் இருந்தாலும் அரசின் நல்ல திட்டங்களால் பெண்கள் ஓரளவு தங்கள் குடும்பத்தை கவனித்து வருகின்றனர். இருந்தாலும் போலி மது பாட்டில்கள் 24 மணி நேரம் விற்பனை நடைபெறுவதை முற்றிலும் தடுத்து நிறுத்தினால் பல லட்சம் குடும்பப் பெண்களின் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் காணப்படும் . ஆகவே போலி மது பாட்டில் விற்பனை கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை அழைத்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஆலோசனை நடத்தும் அந்த நேரம் மட்டும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் முனைப்போடு செயல்படுகின்றனர் .
அதன் பின்பு அப்படியே அதை விட்டு விடுகின்றனர் .
என சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்
.
ஆகவே மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் வாஸ்துகளை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறை நிர்வாகத்திற்கும் மதுவிலக்கு துறை உயர் அதிகாரிகள் தனிப்படை அமைத்து நேர்மையான அதிகாரிகளை நியமித்து
சட்டவிரோத மது விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தால் மட்டுமே மது பாட்டில் மட்டும் கஞ்சா போன்ற சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த முடியும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் .
2021 திமுக ஆட்சி வந்த உடன் திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டை அருகே அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக அப்போது இருந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு கிடைத்த ரகசியத் தகவலின் படி எஸ்பி தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் அனுமந்தராயன் கோட்டை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் 180 மில்லி அளவுகொண்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக இன்பராஜ் உட்பட 6 நபர்களைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட அனுமந்தராயன் கோட்டை பகுதியில்அனுமந்தராயன் கோட்டையிலிருந்து தர்மத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பிரதர் மேடு என்னுமிடத்தில் அனுமந்தராயன் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா இன்பராஜ் கணவரும் திமுக கிளை செயலாளரான இன்பராஜ் தோட்டத்தில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர்.அதில் பாண்டிச்சேரியில் கொண்டுவரப்பட்ட வரப்பட்டு அரசு அனுமதியின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் 11 ஆயிரத்து 500 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.இந்த கடத்தல் தொடர்பாக 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதும் தொடர்ந்து போலி மது பாட்டில் விற்பனை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவேமாண்புமிகு முதலமைச்சர் ஐயா மு க ஸ்டாலின் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா?
மாவட்ட நிர்வாகமும் காவல்துறை நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.அகவே
மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பி பொறுத்திருப்போம்.
தமிழக முதல்வர்கள் அவர்களும் பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பம் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.