தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், அவர்களில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பிருந்தா ஐபிஎஸ், அய்மன் ஜமால் ஆகிய 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஏ.எஸ்.பி பிருந்தா, சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமால் ஆகியர் இருவருக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை, தமிழக அரசின் முதன்மை செயலர் பி.அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார்.
1. பொள்ளாச்சி ஏ.எஸ்.பி பிருந்தா – எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமால் – எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று, ஆவடி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. சுகுணா சிங் – காத்திருப்போர் பட்டியலில் இருந்து, சென்னை ரயில்வே காவல்துறை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. சேலம் நகர வடக்கு துணை ஆணையராக இருக்கும் கௌதம் கோயல் – பள்ளிக்கரணை காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. ஆவடி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக இருக்கும் பாஸ்கரன்- தமிழ்நாடு சிறப்பு காவல் படை மதுரை 6 வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.