அண்ணா பெயரில் உள்ள கட்சி இல்லை அதிமுக; அமித்ஷா பெயர் தாங்கிய கட்சி” – உதயநிதி விமர்சனம்
சனாதனம் பற்றி விமர்சனம்;
உதயநிதி
சனாதன’ சதிகள் என்ன? திமுக திராவிட மாடல் அரசு தகர்த்தது என்ன? பட்டியலிட்டு விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
சனாதன ஒழிப்பு மாநாட்டில் நேற்று வாழ்த்துரை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும்.
இங்கே கூடி இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். தொடக்கத்தில் கலைகளும், எழுத்துகளும் சனாதனக் கருத்துகளை திணிக்கத்தான் பயன்படுத்தப்பட்டன. திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் தோன்றிய பிறகுதான் கலையும், எழுத்தும் உழைக்கிற மக்களுக்கானதாக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதாக மாறியது. அதற்கு முன்பு இங்கே ராமாயணமும், மகாபாரதமும் தான் மக்களுக்கு கலையாகவும், எழுத்தாகவும் சொல்லப்பட்டன.பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது. கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி உடன்கட்டை ஏற வைத்தது. கைம்பெண்களுக்கு மொட்டையடித்து வெள்ளைப் புடவை உடுத்தே சொன்னது. குழந்தைத் திருமணங்களை நடத்த்தி வைத்தது. இதைத் தானே பெண்களுக்கு சனாதனம் செய்தது. என்று சமாதானத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசியது தற்போது தேசிய பாஜகவினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பாஜக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்தியாவின் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாக கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறிய அமைச்சரின் பேச்சு பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) அரசியல் சீற்றத்தைத் தூண்டியது. “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக அரசில் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை மலேரியா மற்றும் டெங்குவுடன் இணைத்துள்ளார்… அதை ஒழிக்க வேண்டும், வெறுமனே எதிர்க்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். சுருக்கமாக, அவர் அழைப்பு விடுத்துள்ளார். சனாதன தர்மத்தை பின்பற்றும் பாரதத்தின் 80% மக்கள் இனப்படுகொலை” என்று அமித் மாளவியா ஒரு செய்தியில் பதிவிட்டுள்ளார்.
சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து அமைப்புகள் பலவும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.இந்நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டாலும் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். ‘உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு சட்டவிரோதமானது. அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி அவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ’உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களைத் தூண்டக்கூடியதாகவும், இழிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும், அதை தூண்டுவதாகவும் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின்கீழ் தண்டனைக்குரியது. எனவே, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.