Breaking News

செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த
குழந்தைகளுக்கும் பூர்விக சொத்தில் உரிமை
உச்சநீதிமன்றம்


செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த
குழந்தைகளுக்கும் பூர்விக சொத்தில் உரிமை
உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஹிந்து வாரிசு
சட்டத்தின்படி. செல்லாத அல்லது
உறவு முறிந்த திருமணங்கள் மூலம்
பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோ
ரின் பூர்விக சொத்தில் உரிமை உள்
ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுபோன்ற குழந்தைகளுக்கு
சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளது
என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுப
டுத்தி உள்ளது.


குழந்தைத் திருமணம், சட்டப்பூர்வமான துணை உயிருடன் இருக்கையில் மற்றொருவரை திருமணம் செய்தல் உள்ளிட்டவை சட்டரீதியாக செல்லாத திருமணங்கள் ஆகும்.திருமண பந்தம் இல்லாமல்
அல்லது திருமண முறிவு ஆகியவற்
றால் பிறக்கும் குழந்தைகளுக்குபெற்
றோரின் சொத்தில் மட்டும் உரிமை
உள்ளதா அல்லது பெற்றோரின்
பூர்விக சொத்தில் உரிமை உள்ளதா
என்ற பல்வேறு சட்டக் கேள்விகள்
அடங்கிய வழக்கை 2011-இல்உச்சநீ
திமன்றஇருநீதிபதிகள் அமர்வு,கூடு
தல் அமர்வுக்கு பரிந்துரைத்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்,
நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா,
மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்
கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை
வெளியிட்டது.
அதில், ‘செல்லாத அல்லது உறவு
முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த
குழந்தைகளாக இருந்தாலும் அவர்
களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்
ளது. திருமண உறவு முறிந்திருந்தா
லும் அந்தக் குழந்தைகளுக்கு சட்ட
பூர்வ அங்கீகாரம் உள்ளதால் அவர்
களுக்கு சொத்தில் உரிமை உள்ளது
என ஹிந்து திருமண சட்டப் பிரிவு
16(1)(2) இல் கூறப்பட்டுள்ளது.
ஹிந்து வாரிசு சட்டப் பிரிவு 6-
இவ் படி. உயிரிழப்பதற்கு முன்பு
நடைபெறும் பூர்விக சொத்தின்
பாகப்பிரிவினையின்போது,ஹிந்து
ஒருங்கிணைந்த குடும்பத்தினருக்கு
சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்
பட்டுள்ளது.
அதுபோல, செல்லாத அல்லது
உறவு முறிந்த திருமணங்கள் மூலம்
பிறந்த குழந்தைகள், அவர்களது
பெற்றோர் உயிரிழந்தாலும் அவர்க
ளின் பூர்விக சொத்தில் பங்கு பெற
ஆண், பெண் இருவருக்கும் சட்ட
பூர்வ அங்கீகாரம் உள்ளது.
ஹிந்து மிதாக்ஷரா சட்டத்தின்
கீழ் வரும் ஹிந்து ஒருங்கிணைந்த
குடும்ப சொத்துகளுக்கு மட்டும் இந்
தத் தீர்ப்பு பொருந்தும்’ என்று நீதிப
திகள் தெரிவித்தனர்.
செல்லாத அல்லது உறவு முறிந்த
திருமணங்கள் மூலம் பிறந்த குழந்
தைகளுக்கு பெற்றோரின் பூர்விக
சொத்துகளில் உரிமை இல்லை
என்று உச்சநீதிமன்ற இரு நீதிபதி
கள் அளித்த உத்தரவுக்குமாறுபட்டு
மூன்று நீதிபதிகள் தற்போது தீர்ப்பு
அளித்துள்ளனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் …