Breaking News

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத டி நகர் காவல் நிலையம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்!?



சட்டம் – ஒழுங்குக்கு சவால் விடும் எந்த சக்திகளையும் அனுமதிக்கக் கூடாது.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியினை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

சட்ட ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் காவல் ஆணையர்கள் ,மாவட்டக் கண்காணிப் பாளர்களுடன் ஆலோசனை நடத்திய போது!

காவல் நிலையத்திற்கு போனால் நியாயம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுரையை காற்றில் பறக்க விடும் காவல் நிலையங்கள்!

அதற்கு எடுத்துக்காட்டாக தி நகர் காமராஜர் காலணி TNSCB யில் வசிக்கும் மத்திய அரசின் முன்னாள் ஊழியர் மூத்த குடிமகன் திரு சுந்தரம் என்கிற ஆதரவற்ற வயதான நபரை.. அதே தி நகர் லலிதா புரதத்தை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் திரு முனிகிருஷ்ணன் என்பவர். சுமார் 12 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி வாங்கி கொண்டு திருப்பி கேட்டால் மிரட்டிவருவதாக  டி. நகர் காவல் நிலையம் குற்றப் பிரிவில் 12-04-2022  அன்று புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் C No 4143 / COP / Visitors / 2022 Dade 07-12-2022 )அன்று புகார் கொடுத்த பின்பும் டி..நகர் காவல் நிலையத்திற்கு பலமுறை சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.

சுந்தரம் தன்னுடைய  வாழ்வாதாரத்திற்காக அன்றாட உணவு சாப்பிட  வங்கியில் வைத்திருந்த குறைந்த பணத்தையும் எடுத்து செலவு செய்து விட்டு தற்போது வாழ்வாதாரம் இன்றி  தவிக்கும் முத்த குடிமகன் சுந்தரம் புகார் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் தாமதம் இல்லாமல் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து மோசடி செய்த பணத்தை மீட்டு தர  உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக இருக்கிறது.

மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக காவல்துறை பாத்திரமாக இருக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிய போது தமிழ்நாடு இவ்வரசின் தலைமையில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருவதால்,

கோயம்புத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவங்களில் நமது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, சிறப்பாக செயல்பட்ட போதிலும், இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்பாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க, காவல் துறையின் முக்கிய பிரிவுகளுக்கிடைய மேலும் வலுவான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருவது, தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் தொடர்ந்து புதிய தொழில்கள் பெருகும் வகையில், தொழில் அமைதி (Industrial peace) தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தொழில் அமைதிக்கு தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்றும், மாவட்டங்களில் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து முன்கூட்டியே அறிந்து அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மாவட்டங்களில் கொலைக் குற்றங்கள், ஆதாயக் கொலைகள், கூட்டுக்கொள்ளைகள், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், இதுபோன்ற குற்ற சம்பங்கள் நடைபெறும் போது மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியினை விரைந்து மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்து, கொள்ளை போன நகைகளை மீட்டு, இழந்தவர்களுக்குத் திரும்ப வழங்கும் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதில் தாமதம் காணப்பட்டால், அது நீதிக்கு நாம் செய்யும் பிழையாகி விடும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக நீங்கள் பாத்திரமாக வேண்டும். காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும். இதனை காவல் துறைத் தலைவர் உறுதி செய்திட வேண்டும். இதைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். இதைத்தான் மக்களும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டும்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காணொலிக் காட்சி வாயிலாக மண்டல காவல் துணை தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் ஆகும்  டாக்டர் பிரசாந்த்  பாராட்டி விருது வழங்கிய கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன்

சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொண்டு வெற்றி ஐபிஎஸ் ஆகும் டாக்டர் பிரசாந்த்க்கு கோவைகொங்குநாடு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பாராட்டி விருது …