Breaking News

சீமான் குறித்து வன்னியரசு ட்விட்டரில் பதிவிட்டதற்கு நாம் தமிழர் கட்சியினர் விமர்சனம்!

சீமான் குறித்து வன்னியரசு ட்விட்டரில் பதிவிட்டதற்கு நாம் தமிழர் கட்சியினர் விமர்சனம்!


சேலம்- ஓமலூரைச்சார்ந்த கோகுல்ராஜ் படுகொலையை யாரும் மறந்திட முடியாது. 2016 ஆம் ஆண்டில் காதலித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடக்கத்திலிருந்தே யுவராஜ் பெயர் அடிபட்டது.
பின்பு கொலைக்கான ஞாயத்தை தினமும் வாட்சப்பில் பேசி வந்தான்.கோகுல்ராஜ் கொலைக்கு யுவராஜ் தான் காரணம் என
போலீசார் ஆவணங்களுடன் வழக்குப்பதிவு செய்தனர். பல சம்மன் அனுப்பிய பிறகு திருச்செங்கோடு சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானான் அந்த கொலையாளி.

அப்போது ஆஜரான விதம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.கொலை செய்ததை கூட பெருமையாக அறிவித்து இளைஞர்கள் படை சூழ வந்தான் யுவராஜ். இந்த உளவியலுக்குப் பின்னால் இருப்பது சாதி ஆதிக்க உளவியல் தான்.அதாவது,நாம் ஆண்ட சாதி.கொல்லப்பட்டவன் ஒரு அடிமை சாதி எனும் உளவியல் தான்.
அதனால் தான்,கோகுல்ராஜ் படுகொலையை ஞாயப்படுத்தியும் ஏளனப்படுத்தியும் யுவராஜால் பேச முடிந்தது. இளைஞர்களை சாதி எனும் போதையால் தவறாகவும் வழிநடத்த முடிந்தது. அதே நிலை தான் நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் இன்று காவல் நிலையத்தில் ஆஜரான விதம். இரண்டுமே ஆதிக்க உளவியல் தான். கொலையாளி யுவராஜிடம் இருந்தது சாதி ஆதிக்க உளவியல்.சீமானிடம் இருப்பது ஆணாதிக்க உளவியல்.இந்த உளவியலுக்கு பெயர் தான் சனாதனம்.சனாதனம் அழிக்கப்பட வேண்டும். ” என்று வன்னியரசு கூறியுள்ளார்.

இதனிடையே வன்னியரசின் பதிவிற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். வன்னியரசுவின் பதிவினை விமர்சித்து வருகிறார்கள்.

About neWsoFtTAmilNADu

Check Also

பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையை அகற்றுவோம்:அண்ணாமலை

பாஜக ஆட்சிக்கு  வந்தால் பெரியார் சிலையை அகற்றுவோம்:இந்து அறநிலைத்துறை அமைச்சரவை இருக்காதுஅண்ணாமலை!ஶ்ரீரங்கம். நவ.09தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை “என் மண் …