Breaking News

சர்வதேச அளவில் நடந்த கருத்தரங்கில் அணு ஆயுதப் போர் நிறுத்தம்” மற்றும் “உலக அமைதி உரையாற்றி விருது பெற்ற மதுரை சோழவந்தான் மாணவிக்கு கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் பாராட்டு விழா!

சர்வதேச அளவில் அணு ஆயுதப் போர் நிறுத்தம்” மற்றும் “உலக அமைதி பற்றி நடந்த கருத்தரங்கில் சிறப்பாக உரையாற்றி விருது பெற்ற மதுரை சோழவந்தான் மாணவிக்கு கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் பாராட்டு விழா!

கல்வி சர்வதேச பொதுப்பள்ளி தலைவர் டாக்டர். செந்தில் குமார் மற்றும் தாளாளர் திரு. குமரேசன் அவர்கள், சிறப்பு விருந்துனர்கள் திரு.ஸ்ரீனிவாசன், திருமதி.பிரேமலதா, பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள்



மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச அளவில் 90 நாடுகள் மற்றும் 120 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட “அகில உலக கருத்தரங்கு நிகழ்ச்சியில் “அணு ஆயுதப் போர் நிறுத்தம்” மற்றும் “உலக அமைதி” குறித்த சிறப்பான கருத்துகளைப் பதிவு செய்த சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி. ஓவியா ஆனந்தி அவர்களுக்கு சர்வதேச அமைப்பு “சிறந்த பேச்சாளருக்கான விருதை” வழங்கி கவுரவித்தது. பள்ளிப் பருவத்தில் 17 வயதுப் பிரிவில் இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய மாணவி எஸ்.ஓவியா ஆனந்தி என்ற பெருமையைப் கல்விக் குழுமம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவி ஓவியா ஆனந்தியின் தனித்திறனை கவுரவிக்கும் விதமாக கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் ‘பாராட்டு விழா’ நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைவர் டாக்டர். செந்தில் குமார் மற்றும் தாளாளர் திரு. குமரேசன் அவர்கள், சிறப்பு விருந்துனர்கள் திரு.ஸ்ரீனிவாசன், திருமதி.பிரேமலதா, பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவி ஓவியா ஆனந்தி கருத்தரங்கில் பகிரப்பட்ட கருத்துகளை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

About neWsoFtTAmilNADu