Breaking News

சரியான திட்டமிடல் இல்லாமல் 10 லட்ச ரூபாய் மதிப்பில் அமைத்த அனைத்து சமுதாயக் கிணறு பராமரிப்பின்றி பாலடைந்து கிடக்கும் அவல நிலை!
மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வருமா மதுரை மாவட்ட நிர்வாகம்!?

சரியான திட்டமிடல் இல்லாமல் 10 லட்ச ரூபாய் மதிப்பில் அமைத்த அனைத்து சமுதாயக் கிணறு பராமரிப்பின்றி பாலடைந்து கிடக்கும் அவல நிலை!
மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வருமா மதுரை மாவட்ட நிர்வாகம்!?



சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மன்னாடிமங்கலம் கிராமத்தில் 2018/ 19.ம் ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 9.97.லட்சம் மதிப்பீட்டில் வைகையாற்று ஓரம் மாயானம் அருகே சமூதாய குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணற்றிலிருந்து மின் மோட்டர் மூலம் தண்ணீர் மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க கதொட்டிக்கு அனுப்பி பின் மன்னாடிமங்கலம் கிராம மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

மன்னாதடிமங்கலம் அனைத்து சமுதாய கிணறு

அதன் பின்பு
சில மாதங்கள் கூட ஆகாத நிலையில் கிணற்றிலிருந்து நீரேற்றுவதை நிறுத்திவிட்டு கிடப்பில் போட்டு விட்டனர்.
கிணறு அமைக்கப்படும் முன்பே மாயானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர் அதையும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் தற்போது 10 லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து உள்ளது என்றும் மாவட்ட நிர்வாகம் சரியான திட்டமிடல் இல்லாமல் இந்த கிணற்றை அமைத்ததால் தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் பாலடைந்த கிடக்கும் நிலை உருவாகியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இன்னும் வரும் வெயில் காலங்களில் பொதுமக்களின் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும் பகுதி பொதுமக்கள் குடிநீர் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடிநீர் செல்லும் குழாய்களை சமூகவிரோதிகள் சிலர் திருடிச் சென்றதாகவும் சமூதாய கிணறிலிருந்து குடிநீர் விநியோகம் தடை பட்டது என்றும் தகவலை தெரிவித்துள்ளனர்.

இன்று வரை பயன்பாடின்றி பாழடைந்து காட்சி பொருளாகவே 10 லட்ச ரூபாய் மதிப்பில் அமைந்த கிணறு இருந்து வருகின்றது என்றும் மேலும் மக்கள் வரி பணத்தில் செலவு செய்து இக்கிணறு பயன்பாடு இன்றி இருப்பதற்கு காரணமான வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு மற்றும் திட்டமிடல் இல்லாமல் பொதுமக்களிடம் நடத்திய கண்துடைப்பு நாடகம் என குற்றசாட்டு எழந்துள்ளது.

மேலும் இதுபோன்ற அதிகாரிகளின் வட்டாரஅளவிலான பல்வேறு கட்டமைப்பு திட்டபணிகள் கிராமங்கள் வளர்ச்சியில் அடிப்படை தரம் குறைந்து மிகவும் பின் தங்கிய நிலையிலே உள்ளது.
இதுகுறித்து கிராமவாசி ராமு
(மன்னாடிமங்கலம் )
கூறியது என்னவென்றால்
குடிநீர் தேவைக்காக வைகையாற்று கரையில் உள்ள மாயானம் அறுகே கிணறு தோண்டும்போதே பல்வேறு அமைப்பை சேர்ந்தவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதை பொருட்படுத்தாத யூனியன் அதிகாரிகள் கிணறு வேலையை முடித்து குழாய் மூலம் தெருகளில் குடிநீர் சப்ளை செய்தனர்.
இந் நிலையில் மாயான கிணறு காரணமாக தண்ணீரை பயன்பாட்டை பொதுமக்கள் புறம் தள்ளியநிலையில் . கிணற்று நீரை இக்கிராமத்தில் உள்ள குளியல் தொட்டி மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் உள்ளிட்ட வைகளுக்கு பயன்படுத்தலாம் என கூறினார்.
எது எப்படியோ பொதுமக்களின் வரிப்பணத்தில் மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தும் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் தங்கள் கவனக்குறைவால் சரியான திட்டமிடல் இல்லாததால் இது போன்ற மக்கள் வரிப்பணம் விரயம் ஆவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

About neWsoFtTAmilNADu

Check Also

நீலகிரி யானை வழித் தடங்களில் கட்டப்பட்டுள்ள 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உரிமையாளர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் …