Breaking News

சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவி அமைப்பாளர்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவி அமைப்பாளர்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டாக்டர் கலைஞர் மு க கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நளினா தலைமையில் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் சேர்ந்து சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவி அமைப்பாளர்களுக்கு ஒரு நாள் உணவு பாதுகாப்பு பயிற்சி, உடல்நிலை பரிசோதனை மற்றும் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி துணை வட்டார வளர்ச்சி (சத்துணவு) பொது அலுவலகத்தில் பழனி ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவி அமைப்பாளர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பழனி நகர தீயணைப்புதுறை மற்றும் மீட்பு பணித்துறை நிலை அலுவலர் கே பாஸ்கரன் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொண்டு சத்துணவு அமைப்பாளர்களுக்கும் மற்றும் உதவி அமைப்பாளர்களுக்கு சமையல் செய்யும்போது பாதுகாப்பான முறையில் கையாள வேண்டிய வழிமுறைகளை அதாவது எளிதில் தீ பற்றக்கூடிய துணி பேப்பர் விறகுகள் ஆயில் மண்ணெண்ணெய் மற்றும் எலக்ட்ரிகல்ஸ் மின்சாரம் மூலம் எரிவாயு சிலிண்டர் மூலம் தீப்பற்றினால் எப்படி அதிலிருந்து மீட்பது என்பதை நிலை அலுவலர் கூறியது தண்ணீரை உபயோகப்படுத்தி மற்றும் கம்பளி ஈர சாக்கு மூலம் தீயை அணைப்பது மற்றும் சமையல் அறைகளில் கதவு ஜன்னல் திறந்த வைப்பது சிலிண்டர் தீ பற்றினால் அருகில் செல்போன் மற்றும் மின்சாதனப் பொருள்கள் மற்றும் மெயின் பாக்ஸ் யுபிஎஸ் ஆஃப் செய்திட வேண்டும் ஈரமில்லாமல் மணலைக் கொண்டும் தீயை அணைத்து விடலாம் என்று தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு பணித்துறை செயல்முறைப்படுத்தி விளக்கினார்கள் . இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சத்துணவு அமைப்பாளர்கள் பாதுகாப்பான முறையில் சத்துணவு சமையல் செய்வோம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டனர்.மேலும் தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணித்துறை பழனி நகரம் முழுவதும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9445 0 86334 மற்றும் தமிழக அரசு ஹெல்ப்லைன் எண் 101 112 108 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம் என்று கூறினர்

About neWsoFtTAmilNADu