சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி.
மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்களின் தனித்திறனை ஊக்குவித்து மாணவர்களிடையே ஆர்வத்தினை ஏற்படுத்தும் வகையில், பள்ளியில் பயிலும் 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வு வகுப்பு வாரியாக நடைபெற்றது. இதில் 80 சதவீதத்திற்கு மேல் உள்ள மாணவர்கள் முதல் தரத்தில் வெற்றி பெற்றனர். இம்மாணவர்களை கவுரவிக்கும் விதமாக ” கேம்பிரிட்ஜ் தெற்கு ஆசியாவின் வணிக மேம்பாட்டுத் தலைவரான திரு. மணிஷ் பூரி” அவர்கள் மாணவர்களை வாழ்த்தி கவுரப்படுத்தினார். போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இத்தேர்வினை முறையாகப் பயிற்றுவித்து வழி நடத்திய ஆங்கிலப் பயிற்சியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினர் முன் கவுரவிக்கப்பட்டனர். இதில் கல்வி குழும பள்ளியின் தலைவர்.டாக்டர்.செந்தில்குமார் முதல்வர் திருமதி கண்ணாத்தாள், முதல்வர் ஜூடிஜெயசீலி, கல்வி குழும இயக்குனர். திருமதி லில்லி மற்றும் கல்வி குழும மனித வள மேலாண்மை அலுவலர் திருமதி. அனிதா அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டினர்.