Breaking News

காவல் நிலையங்களில் சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. ஏடிஜிபி அதிரடி உத்தரவு

காவல் நிலையங்களில் சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. ஏடிஜிபி அதிரடி உத்தரவு!

சென்னை:
சிவில் பிரச்சினைகளில் தேவையின்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார்.
சில நேரங்களில் சட்டத்தை மீறியும் காவல் நிலையங்களில்
சிவில் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன. சிவில் தொடர்பான பிரச்சனைகள் பேசி பார்த்தும் முடியாத புகார்களை, நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ளும்படி கூறி காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். எனினும், சிவில் பிரச்சினைகள் போலீசாரிடம் செல்வது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், சிவில் பிரச்சினைகளில் அவசியம் இன்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஏடிஜிபி அருண் கூறியதாவது:- எப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளிட்டவை இன்றி எந்த ஒரு மனுக்கள் மீதும் காவல்துறை விசாரணையும் நடத்தக் கூடாது.
பணத்தகராறு, சொத்து தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் தலையிடுவதை போலீசார் தவிர்க்க வேண்டும். சிவில் விவகாரங்களில் தலையிடுவது அவசியம் என கருதினால் மாவட்ட எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும். உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்”என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About neWsoFtTAmilNADu

Check Also

மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்டதற்காக மேற்கொண்ட 3 காவலர்கள் அதிரடி பணியிடை நீக்கம் செய்த ஈரோடு மாவட்ட காவல் காணிபாளர்.

ஈரோடு எஸ் பி அதிரடி 3 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்ஈரோடு மாவட்டம்தாளவாடி காவல் நிலைய உதவி ஆய்வாளராக …