Breaking News

காரைக்கால் மாவட்டத்தில்  மக்களவை தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஓட்டுனர்களுக்கு பாராட்டு விழா.

காரைக்கால் மாவட்டத்தில்  மக்களவை தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஓட்டுனர்களுக்கு பாராட்டு விழா.

காரைக்கால்.மே.18

புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் நடந்து முடிந்த 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய  புதுச்சேரி அரசு ஓட்டுனர்களுக்கு பாராட்டு விழா வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி . பிரபாகர ராவ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று கலந்து கொண்டு பேசிய வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அவர்கள் கூறுகையில் மக்களவையில் தங்களின் பங்களிப்பு மிகச் சிறப்பானது என்றும்  தேர்தல் தினங்களில் எந்தவித தொய்வும் இல்லாமல் நீங்கள் பணியாற்றியது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் நீங்கள் அனைவரும் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள் என்று பாராட்டி பேசினார்.. 

அவர் மேலும் கூறுகையில் இது போலவே வருகின்ற தேர்தல்களிலும் மற்றும் பேரிடர் காலங்கள் உள்ளிட்ட அவசரப் பணிகளில் தங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம்,   இது போலவே சிறப்பாக பணியாற்ற முன்வர வேண்டும்,  பொது மக்களுக்கு ஓட்டுனர்களின் பங்கு மிகவும் அவசியம்  என்றார்.

இந்நிகழ்வில் வாகன ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, தேர்தல் துறை கண்காணிப்பாளர் திரு வித்யாதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

About neWsoFtTAmilNADu