Breaking News

காரைக்காலில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையை (Strong Room) ஆய்வு செய்த புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி  ஜவகர்

காரைக்கால்.மே.17

மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்கள் அனைத்தும் இயங்குகின்றனவா என்பது குறித்தும்  பாதுகாப்பு ஏற்பாடுகள்  குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.   சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
எதிர்வரும் ஜூன் 4-ஆம் தேதியன்று வாக்கு எண்னும் இடங்களையும் அதற்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு வாக்கு எண்ணுவதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும்

மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான . மணிகண்டன், ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்..

மேலும் ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பாதுகாப்பு அறையையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் புதுச்சேரி மாநில துணை தலைமை தேர்தல் அதிகாரி  ஆதர்ஷ்  மற்றும் காரைக்கால் மாவட்ட உதவி தேர்தல்  அதிகாரிகள்  ஜான்சன் மற்றும்  சச்சிதானந்தன், காரைக்கால் மாவட்ட துணை தேர்தல் அதிகாரிசெந்தில்நாதன்,  தேர்தல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

About neWsoFtTAmilNADu