Breaking News

காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைத்த முதல்வர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், தலா ரூபாய் 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன்படி, தேனி மாவட்டத்தில்,
1. தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகில் புதிய நகர்ப்புற நலவாழ்வு மையம்,
2. தேனி-அல்லிநகரம் நகராட்சி ஒண்டிவீரன் நகர் பகுதியில் ஒரு நகர் புற நலவாழ்வு மையம்,
3. போடிநாயக்கனூர் நகராட்சி பார்க் ரோடு பகுதியில் ஒரு நகர்ப்புற நலவாழ்வு மையம் ,
4.கம்பம் நகராட்சி டி எஸ் கே நகர் பகுதியில் ஒரு நகர்ப்புற நலவாழ்வு மையம் ,
என மொத்தம் 4 நகர்புற நலவாழ்வு மைய கட்டங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் .

நகர்ப்புற நலவாழ்வு மைய   கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேனி மாவட்ட  ஆட்சியர்.



கம்பம் நகராட்சி டி.எஸ்.கே நகர் பகுதியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி வைத்து, வெளி நோயாளிகள் சிகிச்சை முறையினை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
இந்த நகர்ப்புற நலவாழ்வு மையமானது, காலை 8 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.00 மணிக்கு தொடங்கி, இரவு 8.00, மணி வரையிலும், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சைகளை மருத்துவ அலுவலர் வழங்குவார்.
இந்த நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில், ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர் , ஒரு சுகாதார ஆய்வாளர் , ஒரு மருத்துவமனை பணியாளர் என நான்கு மருத்துவ அலுவலர்கள்
பணி ஆற்றுவார்கள் .
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோ ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.முருகன், கம்பம் நகராட்சித்தலைவர் சந்திரகலா, கம்பம் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம்
மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சிவகாசி, திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் நகராட்சிகளில் என மொத்தம் ரூ.1.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது, சிவகாசி நகராட்சி, நகர்ப்புற நலவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் புதிய நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் குத்து விளக்கேற்றி வைத்தார்.

About neWsoFtTAmilNADu

Check Also

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!சேலம்: ஜன.22மாநாட்டுத் திடலில் உள்ள …