Breaking News

கவுண்டமணியுடன் இணையும் அர்ஜுன்!? பழனிச்சாமி வாத்தியார் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!

20/01/2023 கவுண்டமணியுடன் இணையும் அர்ஜுன்!?
பழனிச்சாமி வாத்தியார் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!

பி டி .வாத்தியாராக கவுண்டமணி நடிக்கும் பழனிச்சாமி வாத்தியாராக நடிக்கும் படத்தில்
11 தயாரிப்பாளர்கள் இணைந்து நடிக்க இருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தை
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் தயாரிக்கும் இரண்டாவதாக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் திரைப்படம்

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்து இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி.
சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை தன்னுடைய வசனத்தால் உடல்மொழியால் நடித்து அனைவரையும் சிரிப்பலையால் கவருவது கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன் பழனிச்சாமி வாத்தியார் படத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தி அனைவரது மனதிலும் நிற்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக தயாரிப்பாளர் மதுரை செல்லும் தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
மற்றும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார்,நந்தகோபால்
R.K. சுரேஷ்,மதுரை டாக்டர் சரவணன், மங்கை அரி ராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார், ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள்
மற்ற நடிகை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

wide angle ரவிசங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளுக்கு
தனித்த இசை, மனதில் நிற்கும் பாடல்களை தந்த இசையமைப்பாளர் K இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இவர் ஏற்கனவே கவுண்டமணி நடித்த 49 ஓ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.நாகராஜ் எடிட்டிங் செய், கலை இயக்குனராக ராஜா பணியாற்றுகிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன்.(DFT)
இணை தயாரிப்பு – மணவை புவன்
தயாரிப்பு – மதுரை செல்வம்
இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.

இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக அர்ஜுன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது!

About neWsoFtTAmilNADu

Check Also

பருத்தி வீரன்’ பட தயாரிப்பாளர் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்

அமீர் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்!சென்னை: ‘நவ.29பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் பாரதிராஜா ஆதரவு …