Breaking News

கலைஞரின் நூற்றாண்டு விழா-100 ஐ கொண்டாடும் வகையில் தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தேனி மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா-100 -ஐ கொண்டாடும் வகையில், தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வஷஜீவனா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எ.ஸ்.சரவணகுமார் முன்னிலையில் (19.08.2023) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர், மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன்படி, தேனி மாவட்டத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் மருத்துவச் சான்று, தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான உதவி மையம் போன்ற பல்வேறு விதமான சேவைகள் வழங்கப்படுகிறது.
மேலும், இச்சிறப்பு முகாமிற்கு வருகை வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பிற சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இம்முகாமில் 51 நபர்களுக்கு அடையாள அட்டை பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது, 45 நபர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டைகளும், 113 நபர்களுக்கு ரயில் மற்றும் பேருந்து பயண அட்டைகளையும், 74 நபர்களுக்கு தேசிய தரவுத்தள அட்டை (UDID Card), வருவாய்த்துறையின் கீழ் 5 நபர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் மற்றும் 14 நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது. 2 நபர்களுக்கு புதிய ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கான 43 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. நடைபெற்ற சிறப்பு முகாமில் 173 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி , பெரியகுளம் வட்டாட்சியர் அர்ஜுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …