Breaking News

கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்!

கம்பம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்


தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

கம்பம் நகரில் சுகாதாரப் பணிகளுக்காக பிரிக்கப்பட்டுள்ள மூன்று டிவிஷன்களில் ஒப்பந்த பணியாளர்கள் பிரித்து அனுப்பப்படுகின்றனர். இவர்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வாங்க வேண்டும்.
இந்நிலையில், கம்பம் நகராட்சியில் பணியுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கு
பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், அடுத்து 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வேலை பார்க்க சொல்கின்றனர். குப்பையை பிரித்து கொடுக்க சொல்கின்றனர். குப்பைகளை தரம்பிரிப்பதால் வேலைப்பழு கூடுதலாக உள்ளது. ஓய்வு தருவதில்லை, ஆட்கள் குறைவாக உள்ளதால் பணிச்சுமை கூடுதலாக உள்ளது.
இது குறித்து கேட்டால் அதிகாரிகள் யாரும் பதில் செல்வதில்லை. அதனால் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் செய்கிறோம்’ என்றனர்.
இது குறித்து, தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் கூறுகையில், ‘தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கும் குப்பை தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 415 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. கம்பம் நகராட்சி பகுதியில் தினசரி சுமார் 15 முதல் 20 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதை தரம்பிரித்து கொடுத்தால் மட்டுமே பணம் கிடைக்கும். நேற்றைய தினம் சுமார் 110 தொழிலாளர்கள் பணிபுரிந்தும் வெறும் 7 டன் குப்பை மட்டுமே பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு பணிச்சுமையை கூட்டவில்லை. குப்பையை பிரித்து தர சொல்கிறோம். இது இங்கு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள எல்லா நகராட்சிகளிலும் நடைமுறையில் உள்ளது’ என்றனர்.

About neWsoFtTAmilNADu