உடுமலை குடிமங்கலம் அதிமுக நிர்வாகியான சி.மாசிலாமணி விவசாய பாசன கால்வாயில் சட்ட விரோதமாக நள்ளிரவில் பைப்புகள் மூலம் திருடியதாக அதிமுக நிர்வாகியான சி.மாசிலாமணி மீது வழக்குப் பதிவு.
உடுமலை விவசாய பாசன கால்வாயில் தண்ணீர் திருடியதாக உடுமலை குடிமங்கலம் பகுதி அதிமுக நிர்வாகி சி.மாசிலாமணி மீது வழக்கு பதிவு.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது.
பரம்பிக்குளத்தில் இருந்து துாணக்கடவு சர்க்கார்பதி வழியாக நீர் திருமூர்த்தி அணைக்கு செல்கிறது.
பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனம் எனும் பி.ஏ.பி.- திட்டத்தில் உயிர் நாடியாக விளங்கும் பரம்பிக்குளம் அணை 72 அடி உயரம் அவ்வப்போது நீர்வரத்து அதிகரிக்கும்போது உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
அதேபோல் கோடை காலங்களில் பாசன விவசாய நிலங்களுக்கு அவ்வப்போது தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.
கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பரம்பிக்குளம் அணையின் பிரதான கால்வாயின் கிளை கால்வாயான கிருஷ்ணாபுரம் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்போது
நள்ளிரவில் பைப்புகள் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் திருடி 65 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முறைகேடாக தண்ணீரை பயன்படுத்தி வந்ததாக அதிமுக நிர்வாகி மாசிலாமணி மீது பல புகார்கள் கொடுத்தும் அதிமுக ஆட்சியில் இருந்த நீர்வளத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் வந்ததால் 2000 ஏக்கர் பாசன விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் குற்றச் சாட்டு வைத்துள்ளனர்.
திமுக ஆட்சியிலும் தொடர்ந்து மாசிலாமணி பைப்புகள் மூலம் நள்ளிரவில் தண்ணீர் திருடி வந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர் தண்ணீர் திருட்டை தடுத்து நிறுத்த பாசன சபை பாசன விவசாயிகள் ஒன்றிணைந்து குழு அமைத்து வலசு பாளையம் கிளை கால்வாயில் 16/02/2024 அன்று இரவில் ரோந்து பணி மேற்கொண்ட போது இரவு 12 மணி அளவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அவரது உடன்பிறந்த சகோதரர்
மாசிலா மணி என்பவர் சட்ட விரோதமாக மோட்டார் பம்ப் அமைத்து 4 இஞ்ச் பைப்புகள் மூலம் தண்ணீரை திருடி விவசாய நிலத்திற்கு பயன்படுத்தி வந்ததை
மூங்கில் தொழுவு கீரான நீரிணை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் கோ.குருசாமி வி.ரகுபதி செல்வராஜ் ஆகிய 10 பேர் கொண்ட குழு கல்வாயில் பயன்படுத்திய குழாய்களை அகற்றி விட்டதாகவும். இந்தத் தண்ணீர் திருட்டால் 2000 ஏக்கர் பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் நிரந்தரமாக தண்ணீர் திருடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் அதே போல் சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
24/02/2024 அன்று பொள்ளாச்சி ஆழியார் கோட்டம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் முன்னிலையில் தண்ணீர் திருடு நடைபெறும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின்னர்
திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் விஜய் என்பவரிடம் பாசன விவசாயிகள் குழு கால்வாயில் தண்ணீர் திருட பயன்படுத்திய பைப்புகளை ஒப்படைத்து தண்ணீர் திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர் அந்த கோரிக்கையின் அடிப்படையில்
சுல்தான்பேட்டை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் விஜய்
உடுமலை குடிமங்கலம் காவல் நிலையத்தில்
கிளை கால்வாய்களில் முறையற்ற தண்ணீர் திருட்டினை தடுத்து நிறுத்த உயர்நீதிமன்றம் வழக்கு எண் 3181/2017மற்றும் 10544/2015 வழக்கின் தீர்ப்புகளின் அடிப்படையில் அடிப்படையில் சப்தவிரோதமாக கிளை கால்வாய்களில் தண்ணீர் திருடிய சி .மாசிலாமணி என்பவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட குடிமங்கலம் காவல் நிலையத்தில் மனு
ரசீது 54/2024 வழங்கியுள்ளனர் .
அதன் பின்பு 3/3/2023 சட்டப்படி புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு( குற்ற எண். 66/2024 )இந்திய தண்டனைச் சட்டம் 430 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சட்டவிரோதமாக தண்ணீரை திருடி பயன்படுத்திய அதிமுக நிர்வாகி மாசிலாமணி கைது செய்யப்படுவார் என தகவல்.
எது எப்படியோ விவசாயிகளுக்கு பாசன விவசாயிகளுக்கு அவ்வப்போது நீர்வளத்துறை மூலமாக திறந்து விடும் தண்ணீரை தன்னுடைய அரசியல் மற்றும் அதிகார பலத்தை வைத்துக்கொண்டு மாசிலாமணி நள்ளிரவில் பாசன கால்வாயில் பைப்புகள் மூலம் தன்னுடைய 65 ஏக்கர் சொந்த விவசாய நிலங்களுக்கு தண்ணீரை திருடி பயன் படுத்தி வந்ததற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது பாரபட்சம் பார்க்காமல் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர் கோரிக்கையாகும்!