Breaking News

ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்யும் பாஜக!

ஓபிஎஸ் அணி சார்பாக எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஓபிஎஸ்!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடை தேர்தலில் ஓபிஎஸ் சார்பாக நூத்தி பதினெட்டு பேர் கொண்ட குழுவை தேர்தல் பணிக்கு நியமித்துள்ளார் ஓபிஎஸ்.
இருந்தாலும் பாஜக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் கொடுப்போம் என்றும் இல்லையென்றால் தாங்கள் வேட்பாளரை நிறுத்தி பாஜகவை ஆதரவு கேட்போம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ள நிலையில் தற்போது வரை பாஜகவின் முடிவு என்ன என்று தெரியாமல் இருக்கும் நிலையில்
ஓபிஎஸ் அணியில் நிற்கும் வேட்பாளர் யார் என்று தற்போது பரவலாக ஓபிஎஸ் அணி சார்பாக பேசப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகர மாணவரணி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முருகானந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார். அவருக்கு ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. எனவே மாவட்ட செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ நீதிமன்றத்தில் எடப்பாடி கொடுத்திருக்கும் மேல்முறையீடு பாஜகவின் நிலைப்பாடு இதையெல்லாம் கருத்தில் வைத்து தற்போது இபிஎஸ் ஓபிஎஸ் தங்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

ஓபிஎஸ் அதிமுக பொருளாளர் முருகானந்தம்

About neWsoFtTAmilNADu

Check Also

பாசிசம் வீழட்டும் ..
இந்தியா வெல்லட்டும்.
உரிமைகளை மீட்க எட்டு திசைக்கும் தெறிக்கட்டும்ஸ்டாலினின் குரல்..!

பாசிசம் வீழட்டும் .. இந்தியா வெல்லட்டும்.உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்..!நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தப் பணிகளில் ஈடுபட …