Breaking News

ஒற்றை சாளர முறையில்(Single Window Portal Facilitation) விரைவாக உரிமம் மற்றும் அனுமதி பெறும் இணையதளம்

செ.வெ.எண்: நாள்: 11.04.2023
விருதுநகர் மாவட்டம்

தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் நிறுவனம் மற்றும் FAME-TN இணைந்து ஒற்றை சாளர முறையில்(Single Window Portal Facilitation) விரைவாக உரிமம் மற்றும் அனுமதி பெறும் இணையதளம் தொடர்பான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(11.04.2022) தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் நிறுவனம் மற்றும் FAME-TN இணைந்து ஒற்றை சாளர முறையில்(Single Window Portal Facilitation) விரைவாக உரிமம் மற்றும் அனுமதி பெறும் இணையதளம் தொடர்பான கருத்தரங்கு தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் ஆணையர் திருமதி கிரேஸ் எல்.பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில், தொழில் நிறுவனங்கள் ஒரு முனை தீர்வுக் குழுவிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பாக சென்னை FAME-TN மற்றும்Guidance தமிழ்நாடு ஆகிய துறைகளிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

விருதுநகர் மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. தீப்பெட்டி, பட்டாசு, உணவு உற்பத்தி தொழிற்சாலைகள், நூற்பாலைகளை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு துறை சார்பில் குறிப்பிட்ட கால அளவில் பெறக்கூடிய அனுமதிகள், சான்றுகள், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அதற்கென்று நேரம் மற்றும் மனிதவளத்தை செலவழித்து பெற வேண்டிய நிலை நீண்ட காலமாக இருந்து வந்தது. தற்போது, தொழில் வளர்ச்சியினை விரைவுபடுத்திடவும், மேம்பாடு அடைய செய்திடவும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கொள்கைகள் எளிமையாக்கப்பட்டு தொழிற்கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் களைந்திட ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான உரிமங்கள்ஃமின் இணைப்புகள்ஃஒப்புதல்கள் ஆகியவற்றை எவ்வித சிரமமுமின்றி விரைந்து வழங்கிட வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் நிறுவனம் மூலம் சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, புதிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வகையான உரிமங்கள்ஃமின் இணைப்புகள், ஒப்புதல்கள், தடையின்மை சான்றிதழ்கள் ஆகியவற்றை அரசுத் துறைகள் மற்றும் அரசுச் சார்ந்த நிறுவனங்களிடமிருந்து தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அவற்றை மேலும்; அதிகப்படுத்துவதற்கான தேவையும், வாய்ப்புகளும் மாவட்டத்தில் இருக்கின்றன. தொழில் நிறுவனங்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் ஆணையர் அவர்கள் தெரிவிக்கையில்:

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை எளிமையாக்கும் வகையில் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச் சாளர முறை வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நிறுவனம் அத்தனை அனுமதிகளையும் பெற தனித்தனி துறைகளை அணுக வேண்டிய அவசியமில்லை. அனைத்து தொழில் முனைவோர்களும் இந்த இணைய வழி ஒற்றைச் சாளர முறை வசதியை அறிந்து பயன்பெறும் வகையில் மாவட்டம் தோறும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்து நடத்தபட்டு வருகிறது.

அதன்படி ஓசூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கருத்தரங்கில் ஒற்றைச் சாளர முறை வசதியை பயன்படுத்தும்போது ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிப்பது குறித்து மிகவும் விரிவாக எடுத்துச் கூறப்படுகிறது. மேலும் அனைத்து மாவட்ட தொழில் மையங்களிலும் தொழில் முனைவோர்கான வழிகாட்டுதல் அலுவலர் மூலம் தேவையான உதவிகளை பெறலாம் என தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் ஆணையர் திருமதி கிரேஸ் எல்.பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.ராமசுப்பிரமணியன், தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் நிறுவன மண்டல மேலாளர் திரு.சுரேஷ், முதுநிலை மேலாளர் திரு.கௌதம்தாஸ், மேலாளர் திரு.சார்லஸ், அரசு அலுவலர்கள் உட்பட பல்வேறு தொழில் நிறுவன உரிமையாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்

About neWsoFtTAmilNADu

Check Also

நீலகிரி யானை வழித் தடங்களில் கட்டப்பட்டுள்ள 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உரிமையாளர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் …