Breaking News

ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் தனித்தனியே வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் ஒரு கோடியே 6

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் தனித்தனியே வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

தங்களது அன்புக் கட்டளையால், பேருந்தில் மகளிருக்குக் கட்டணமில்லா பயணம், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலக் கல்லூரிக்கு வரும் புதுமைப் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, நகைக்கடன் ரத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள். மகளிர் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை இத்திட்டங்கள் உருவாக்கி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வரிசையில் மற்றுமொரு மாபெரும் திட்டம்தான் ‘மகளிர் உரிமைத் திட்டம்’ என்றும் இந்தத் திட்டத்தின் பயனாளியாகத் தகுதியின் அடிப்படையில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
உதவித் தொகை அல்ல; உரிமைத் தொகை…
பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் எனப் பெண்களின் பல மணிநேர உழைப்பு இருக்கிறது. இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளிலும் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு வழங்கிய மகளிர் முன்னேற்ற மாண்பாளர், கருணாநிதியின் நூற்றாண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்படுவதால், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது பெண்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

50 ஆயிரம் பேருக்கும் தனித்தனியே வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

About neWsoFtTAmilNADu

Check Also

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!சேலம்: ஜன.22மாநாட்டுத் திடலில் உள்ள …