Breaking News

எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக பயப்படுகிறது
முதல்வர் விமர்சனம்

எதிர்க் கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக பயப்படுகிறது
முதல்வர் விமர்சனம்!


உச்சநீதிமன்றம்
எச்சரித்துள்ளதை பாஜக வசதியாக மறந்து விடுகிறது!
விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் அமலாக்கத்துறையால்
கைது செய்யப்பட்டது, தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சியினர் மீது விசாரணை
அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது.
விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.
ஒன்றிய அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.
அமலாக்கத்துறை வெளிப்படையாகவும் நியாயமாகவும் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம்
எச்சரித்ததை பாஜக வசதியாக மறந்துவிடுகிறது.
பாஜக அரசு, சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் புறக்கணிக்கிறது.
எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக பயப்படுகிறது என முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

About neWsoFtTAmilNADu

Check Also

சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம்.நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது …