Breaking News

எடப்பாடி மீது அப்செட்டில் இருக்கும் பாஜக.
இரட்டை இலை கிடைக்கவில்லை என்றால் எடப்பாடி எடுத்திருக்கும் ஆப்ரேஷன்” B”

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக உறுதியாக தெரிவிக்காமல் சுற்றி சுற்றி பேசிவருகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு


இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் குழுவில் இருக்கும் நம்பிக்கைக்குரிய முன்னாள் அமைச்சர்கள் மூலம் நிர்வாகிகள் மூலம் பூத் கமிட்டி ஏஜெண்டுகளுக்கு பணம் பட்டுவாடா கொடுக்கும் வேலையும் சத்தமில்லாமல் தொடங்கிவிட்டதாக தகவல் வந்துள்ளது.


அது மட்டும் இல்லாமல் எடப்பாடியின் மகன் சுனில் வைத்துள்ள ஐடி விங் மூலம்
இடைத்தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை ஒரு சர்வே எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில்
தமாகா வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். 58 ஆயிரத்து 398 வாக்குகள் அப்போது கிடைத்தன. தற்போது மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் கூட 15 சதவீத வாக்குகள் மட்டுமே பெற முடியும் என்ற தகவல்களும் வந்துள்ளது.
இரட்டை இலை கிடைக்கவில்லை என்றால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டால் டெபாசிட் இழக்கக்கூட நேரிடும் ஒரு சில சர்வே சொல்கிறது.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் முடிவு வரும் அன்று வெற்றி கொண்டாட்டத்தை தொண்டர்கள் மத்தியில் தற்போதே லட்டுகள் ஆர்டர் செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. வேட்பாளர் யார் எடப்பாடி ஆலோசனை!
முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, அதிமுக மாணவரணி செயலாளர் நந்தகோபால், அதிமுக பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. தென்னரசு, ராமலிங்கம், நந்தகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை களமிறக்க பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக இரட்டை இலை சின்னம் முடங்குகிறதோ இல்லையோ நாம் தேர்தலில் போட்டியிட வேண்டும், தேர்தலில் கண்டிப்பாக நமது வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறாராம்.. சின்னம் முடங்கினால் அதற்கான பிளான் பியும் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக மிக தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்த தேர்தலுக்காக தீவிரமான பணிகளை அவர்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.
இரட்டை இலை சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக இரட்டை இலை சின்னம் முடங்குகிறதோ இல்லையோ நாம் தேர்தலில் போட்டியிட வேண்டும், தேர்தலில் கண்டிப்பாக நமது வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறாராம்.. சின்னம் முடங்கினால் அதற்கான B பிளான் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக மிக தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்த தேர்தலுக்காக தீவிரமான பணிகளை அவர்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.
இதையடுத்தே 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்தது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, டுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜின் அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் ஒரு பக்கம் எடப்பாடி தரப்பு வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளது. இதற்காக தேர்தல் பணிகளை செய்ய 117பேர் கொண்ட குழுவை எடப்பாடி தரப்பு களமிறக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளது. இன்றே எடப்பாடி வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இரண்டு தரப்பும் வேட்பாளரை நிறுத்தினால் சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரண்டு பேரும் தற்போது சட்டப்படி ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் இருக்கிறார்கள்.தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை
தேர்தல் ஆணையத்தில் இந்த விவரம்தான் தற்போது வரை உள்ளது. அதனால் தேர்தல் ஆணையம் இரண்டு பேரின் கையெழுத்தும் இருந்தால் மட்டுமே வேட்பாளரின் பி பார்மை ஏற்றுக்கொள்ளும். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வேட்பாளர் லிஸ்டை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையிட்டுள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று முக்கிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது.
எங்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள், ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு முன்பாக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்க முடியுமா என்று பார்க்கிறோம். தீர்ப்பு தாமதமாகும் பட்சத்தில் இடைக்கால நிவாரணம் வழங்க முடியுமா என்று பார்க்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர். இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இரட்டை இலை சின்னம் முடங்கினால் மட்டும் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி முடிவு செய்து இருக்கிறாராம்.

புல்லட் பைக் சின்னத்தை கேட்பதால் அதை எளிதாக மக்கள் இடையே இடைத்தேர்தலுக்கு கொண்டு செல்ல முடியும் என்று எடப்பாடி இந்த திட்டத்தை வகுத்து இருக்கிறாராம். ஆனால் இரட்டை இலை சின்னம் முடங்கினால் மட்டுமே புல்லட்டை கேட்க வேண்டும். இல்லையென்றால் இரட்டை இலை சின்னம்தான் உறுதியாக எங்களுக்கு வேண்டும் என்று எடப்பாடி தரப்பு கோரிக்கை வைக்கும் திட்டத்தில்தான் இருக்கிறது. இந்த அதிரடி போதாது என்று இன்னொரு அதிரடியையும் இன்றே மேற்கொள்ள எடப்பாடி முடிவு செய்துள்ளாராம். அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை இன்றே அறிவிக்க எடப்பாடி முடிவு செய்துள்ளாராம்.


கிழக்கு இடைத்தேர்தல்
எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். மொத்தமாக 7 மணி நேரம் பிரேக் எடுத்து பிரேக் எடுத்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். விருப்பமனு தாக்கல் செய்த நிர்வாகிகளை பற்றிய பைலை மேஜையில் வைத்து அதை பிரித்துக்கொடுத்து ஆய்வு செய்துள்ளனர். இதையடுத்து எடப்பாடி ஆலோசனை செய்து வருகிறார். மக்கள் ஆதரவு உள்ள நிர்வாகிகள். ஜாதி ஆதரவு, செலவு செய்ய பணம் உள்ள நிர்வாகிகள் பட்டியலை எடப்பாடி எடுத்துள்ளாராம். அதில் ஒருவரை இறுதி செய்து இன்று அறிவிக்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பனிசாமி தரப்பு வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏவும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருமான தென்னரசு போட்டியிட அதிக வாய்ப்பு என கூறப்படுகிறது.

About neWsoFtTAmilNADu

Check Also

பாசிசம் வீழட்டும் ..
இந்தியா வெல்லட்டும்.
உரிமைகளை மீட்க எட்டு திசைக்கும் தெறிக்கட்டும்ஸ்டாலினின் குரல்..!

பாசிசம் வீழட்டும் .. இந்தியா வெல்லட்டும்.உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்..!நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தப் பணிகளில் ஈடுபட …