Breaking News

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி தூய்மை உறுதிமொழி விழிப்புணர்வு!

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி தூய்மை உறுதிமொழி விழிப்புணர்வு!

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு !

தேனி மாவட்டம், தேனி வட்டம் லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ”எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
பள்ளிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ”எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற தூய்மை விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், சுகாதாரமான குடிநீர், தூய்மையாக வகுப்பறைகளை வைத்துக் கொள்வது, பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்வது, குப்பைகளை முறையாக பராமரிப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைப்பது போன்ற செயல்பாடுகளை மாணவர்களிடம் ஊக்குவிப்பதற்கான பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 513 அரசு பள்ளிகளில் ”எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.
. இந்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமையில் நடைபெறும் .
இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, முதன்மை கல்வி அலுவலரின் நேர் முக உதவியாளர் பெருமாள், லெட்சுமிபுரம் பள்ளி தலைமையாசிரியர் பேபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.சென்னை: …