ஊராட்சி மணி’ என்ற, தொடர்பு மையம் துவக்கம்!
தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வசிப்போர், அடிப்படை வசதி குறைபாடுகள் தொடர்பான தெரிவிக்க
ஒருங்கிணைந்த வசதி ஏற்கனவே உள்ளது. ஆனால், ஊராட்சிகளில் வசிப்போர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தான், குறைகளை பதிவு செய்ய வேண்டும். தொலைதுாரங்களில் வசிப்போர், புகார் தெரிவிக்க ஒன்றிய அலுவலகம் வர சிரமப்படுகின்றனர்.
இதனால், ஊராட்சிகளிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க, பிரத்யேக மையம் ஏற்படுத்தப்படும் என, அரசு அறிவித்து இருந்தது.
இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குனர் பா.பொன்னையா பிறப்பித்துள்ள உத்தரவு:
ஊராட்சி மணி’ என்ற பெயரில், புகார் மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள், ‘155340’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இந்த மையம் நாளை துவக்கப்பட உள்ளது.
இதில், பெறப்படும் புகார்கள், அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, மாவட்ட வாரியாக தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Check Also
2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.
2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.சென்னை: …