Breaking News

உடுமலை
குடிமங்கலம் தடுப்பு அணை கட்டுவதாக அறிவிப்புக்கு திருப்பூர் தெற்கு மாவட்டம்,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் , உடுமலைப்பேட்டை வட்டம்,
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குடிமங்கலம் ஊராட்சி உட்பட்ட க.ச எண். 344 ல்
தடுப்பு அணை கட்டுவதாக அறிவிப்புக்கு
தடுப்பு அணை இல்லாத பக்கம் வேறு இடத்தில் தடுப்பு அணை அமைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் , உடுமலைப்பேட்டை வட்டம்,
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குடிமங்கலம் ஊராட்சி உட்பட்ட க.ச எண். 344 ல்
தடுப்பு அணை கட்டுவதாக அறிவிப்புக்கு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இப்பொழுது புதிதாக கட்ட இருக்கும் தடுப்பு அணைக்கு கிழக்கு புரமாக க.ச.எண் 345 ஏற்கனவே ஒரு தடுப்பு அணை உள்ளது.
மேலும், மேற்குபுறமாகவும் பெரிய குளமும் க/ச எண்344/N2A உள்ளது.

அங்கு தடுப்பு அணை கட்டப்பட்டால் பொது வழித்தடத்தில் தான் ஏரி அமையும் என்பதால் அப்பகுதியில் செல்லும் விவசாயிகளுக்கு விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்லவும்,கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்று வரவும், கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

தாய் நல்லி அம்மன் கோயில், நால்ரோடு முதல் ஆத்துக்கிணத்துப்பட்டி இணைப்பு சாலையும் உருவாகும்படி தகவல் வந்துள்ளது.

மீனாட்சி கார்டன் என்ற வீட்டுமனைகளும் அருகே உள்ளது.
தடுப்பு அணை அமைந்தால் பாதிப்பு ஆகும் என்பதால் பாதிப்பு வராத வண்ணம் வேறு இடத்திற்கு மாற்றி தடுப்பு அணை இல்லாத பக்கம் வேறு இடத்தில் தடுப்பு அணை அமைந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இப்போது இருக்கக்கூடிய பகுதியில் தடுப்பணை அமைத்தால் விவசாய கால்நடைகள் விவசாய பொருட்கள் ஏற்றி செல்லும் வண்டி வாகனங்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாகவும் அமையும் என்ற காரணத்தால் சமூகம் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு ,
திருப்பூர் தெற்கு மாவட்டம்,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்* .

About neWsoFtTAmilNADu

Check Also

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …