Breaking News

உங்கள் பெயரில் உள்ள ரயில் டிக்கெட்டில் உங்கள் உறவினர்கள் பயணிக்கலாம்! ஐ ஆர் டி சி அறிவிப்பு!

ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக ஒரு பெரிய விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் பயனளிக்கும் விதிமுறையாகும்.

பயணிகள் தங்களுடைய டிக்கெட்டை தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன், மனைவி போன்ற குடும்ப உறுப்பினருக்கு மாற்றிக் கொள்ளலாம். யாருடைய பெயரில் மாற்றுகிறோமோ அவர் அந்த ரயிலில் பயணிக்கலாம்.

ரயில்வே விதிகளின்படி, உங்கள் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், மகன்-மகள் அல்லது மனைவி போன்ற உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் மட்டுமே உங்கள் டிக்கெட்டை மாற்ற முடியும். நண்பர்கள், தெரிந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் என வேறு யாரும் உங்களுடைய டிக்கெட்டில் பயணிக்க முடியாது. அது விதிமுறைப்படி குற்றமாகும். அதற்கு அபராதம் போன்ற தண்டனைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பயணத்துக்கு முன்னர் டிக்கெட்டை மாற்றிக்கொள்ள, முதலில் அந்த டிக்கெட்டின் நகலை அருகில் உள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட் யாருடைய பெயரில் மாற்றப்படுகிறதோ அந்த நபரின் ஆதார் அட்டை போன்ற அடையாளச் சான்றினை எடுத்துச் செல்ல வேண்டும். டிக்கெட் பரிமாற்றத்திற்கான விண்ணப்பத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும். என்ற விதிகளை உருவாக்கி ஐ ஆர் டி சி ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

About neWsoFtTAmilNADu

Check Also

நள்ளிரவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்தால் அனைத்து ரயில்களும் தாமதம்!

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே நள்ளிரவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்தால் தாமதமாக சென்ற ரயில்கள்!சென்னை: செங்கல்பட்டு ரயில் …