Breaking News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்! கொண்டாட்டத்தில் பாஜக!



ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் vs இபிஎஸ் அணிகள் தனித்தனியாக போட்டி!

பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கு ஜி கே வாசன் அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில் அதன்பின் ஜி கே வாசன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விற்பதற்கு விருப்பமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில் ஓபிஎஸ் அதிரடியாக பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன்”

இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்

அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உண்டு – ஓபிஎஸ்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்றும் கூட்டணி கட்சியிடம் ஆதரவு கேட்போம் என்றும் பிஜேபி கட்சி போட்டியிட்டால் ஆதரவு கொடுக்க தயார் என்றும் இதுவரை இடைத்தேர்தல் சம்பந்தமாக சசிகலா அவர்களை சந்தித்து பேசவில்லை என்றும் எந்த தேர்தல் வந்தாலும் இரட்டை இலை சின்னத்தில் தான் அதிமுக போட்டியிடும் என்றும் ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடுஎன்று ஓபிஎஸ் அறிவித்துள்ள நிலையில் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்! பாஜக கொண்டாட்டத்தில்….

About neWsoFtTAmilNADu

Check Also

பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையை அகற்றுவோம்:அண்ணாமலை

பாஜக ஆட்சிக்கு  வந்தால் பெரியார் சிலையை அகற்றுவோம்:இந்து அறநிலைத்துறை அமைச்சரவை இருக்காதுஅண்ணாமலை!ஶ்ரீரங்கம். நவ.09தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை “என் மண் …