Breaking News

இளையராஜா துவங்கி வைத்த “சாரா” திரைப்படத்தின் பூஜை!

சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிக்கும் “சாரா” திரைப்படத்தின் பூஜை!
.ஒரு இக்கட்டான சூழலில், தனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த காதலனையா ? அல்லது தனக்காக வாழ்க்கையே தியாகம் செய்த நண்பனையா ? நாயகி யாரை காப்பாற்றுகிறாள் என்பதே இப்படம். கட்டிடங்கள் கட்டப்படும் பின்னணியில் இப்படத்தின் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது, பல சண்டைக்காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக எடுக்கப்பட்டு வருவதாக தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தை
விஷ்வா ட்ரீம் வேர்ல்ட் நிறுவனம் சார்பில் லட்சுமி செல்லம்மாள் குருசாமி தயாரிக்கின்றனர் .

சாரா திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வால், விஜய்விஷ்வா, பொன்வண்ணன், அம்பிகா, யோகிபாபு ரோபோ சங்கர். ஆகியோர் நடிக்கின்றனர்.
காலா திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையில்
இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி, சாரா படத்தின் படப்பிடிப்பு பூஜைக்கு வந்துள்ள அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள், இந்தப் பூஜையை விளக்கேற்றி துவக்கி வைத்த என் தந்தை இளையராஜா அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் அனைத்து உணர்வுகளையும் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும், கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன் என கார்த்திக் ராஜா பேசினார்.
படத்தின் நடிகர் பேசியபோது கார்த்திக்ராஜாவின் இசையில் நான் நடிக்கவுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. விஸ்வா டிரீம் வோர்ல்ட் கம்பெனியினர் வழங்கும் இந்த திரைப்படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து முதன்முறையாக நடிக்கிறேன் மேலும் சாக்‌ஷி, பொன்வண்ணன், அம்பிகா, ரோபோ சங்கர், ஆகியோருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்
அடுத்து பேசிய நடிகை
என்னை இந்த திரைப்படத்திற்கு தேர்வு செய்த இயக்குநருக்கு என் முதல் நன்றி. கார்த்திக்ராஜா சார், இளையராஜா சார், மற்றும் வந்திருக்கும் அனைவருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. இந்தப்படம் ஒரு புதுமையான அனுபவம் தரும் படமாக இருக்கும். எனக்கு தெரிவித்தார்.
இயக்குநர் – ராஜித் கண்ணா
ஒளிப்பதிவு – J. லக்ஷ்மன்
எடிட்டர் – SP அஹமத்.
இசை – கார்த்திக் ராஜா
கலை இயக்குனர் – சுரேஷ் கல்லெறி
சண்டை பயிற்சியாளர் – மிரட்டல் செல்வா
பாடலாசிரியர் – சினேகன், அருண் பாரதி
தயாரிப்பு மேலாளர் – சுந்தரம் சிவம்
புகைப்படம் – சுரேஷ்
ஆடை வடிவமைப்பு – ராஜன்
மேக்கப் – கரி சுல்தான்
மக்கள் தொடர்பு – A ராஜா

About neWsoFtTAmilNADu

Check Also

பருத்தி வீரன்’ பட தயாரிப்பாளர் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்

அமீர் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்!சென்னை: ‘நவ.29பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் பாரதிராஜா ஆதரவு …