Breaking News

இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில்
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்
நேரில் சென்று ஆய்வு!
விருதுநகர். அக்.29
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், வேளாண்மைத்துறை மூலம் டி.மானகசேரி கிராமத்தில் சுமார் 23 ஏக்கர் தரிசு நிலங்களை விவசாயிகளுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட்டு சீர்படுத்தி செம்மை நெல் சாகுபடி இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்டுள்ள பணிகளையும்,

சாதாரண கரும்பு சாகுபடி முறை கடைப்பிடித்து வரும் விவசாயிகளுக்கு நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறைக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குதிரைவாலி விதைகளையும், ரூ.42,000/- மானியத்தில் சுழல் கலப்பையும், ரூ.2500/- மானியத்தில் நெல் விதைக்கும் கருவியையும், ரூ.6000ஃ- மானியத்தில் சோளம் இடு பொருட்களையும், ரூ.1465/- மானியத்தில் பண்ணை கருவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் .

தொடர்ந்து திருவில்லிபுத்தூர் மல்லியில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று, அங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப்பணிகளையும், வெவ்வேறு வகையான பருத்திகள் நடவு செய்யப்பட்டு அதன் வளர்ச்சி குறித்து கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், இராஜபாளையம் நகராட்சி மாடசாமி தெரு மற்றும் குமரன் தெருவில் உள்ள அங்கன்வாடிகளுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் கல்வி முறை மற்றும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்கன்வாடிகளில் புரணமைக்கும் பணிகள் மேற்கொள்ளவும், சேதமடைந்த அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வுகளில், நகராட்சி பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …