Breaking News

இந்திய விமான நிலைய ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய விமான நிலைய ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்-  மாவட்ட ஆட்சியர் தகவல்!

விருதுநகர்.ஜன.11

விருதுநகர் மாவட்டம்
தெற்கு  மண்டல  இந்திய விமான நிலைய ஆணையத்தால்  அறிவிக்கப்பட்டுள்ள  
Junior Assistant (Fire Service) – SRD-,  Junior Assistant (Office), Senior Assistant (Electronics) Senior Assistant (Accounts)  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்-  மாவட்ட ஆட்சியர் தகவல்!


தெற்கு  மண்டல  இந்திய விமான நிலைய ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள   Junior Assistant (Fire Service) – SRD- 73,  Junior Assistant (Office)- 02,  Senior Assistant (Electronics)- 25 Senior Assistant (Accounts)- 19   அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த தேர்வுக்கு  18  முதல்  30   வயது    வரையுள்ளவர்கள்   விண்ணப்பிக்கலாம்.  Junior Assistant (Fire Service) – SRD பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு மற்றும் 3 வருடம் Diploma in Mechanical/ Automobile/ Fire மற்றும் 12-ம் வகுப்பு   தேர்ச்சி  (Regular  Study) பெற்றிருக்க வேண்டும் மற்றும்  Driving License  கட்டாயம். இந்த பணியிடத்திற்கு முன்னாள் இராணுவத்தினர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

Junior Assistant (Office)   பணியிடத்திற்கு  ஏதேனும் பட்டப்படிப்பு   படித்து   இருக்க வேண்டும். Senior Assistant (Electronics)- பணியிடத்திற்கு Diploma in Electronics / Telecommunication / Radio Engineering  தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும். இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Senior Assistant (Accounts)  – பணியிடத்திற்கு B.Com பட்டப்படிப்பு  தேர்ச்சி   பெற்றிருக்க  வேண்டும். இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து தேர்வுகளுக்கும் உடற்தகுதி தேர்வு உள்ளது. தேர்வுக்கு பொது விண்ணப்பிக்க  ரூ.1000 (ஜி.எஸ்.டி உட்பட) ஆன்லைனில் செலுத்த வேண்டும். இதில்   பெண்கள்/எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்/முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

About neWsoFtTAmilNADu

Check Also

வேலைவாப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான
விண்ணப்பங்கள்

வேலைவாப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது – மாவட்ட …