Breaking News

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடத்திய ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு !

கொடை ரோடு சுங்கச் சாவடியில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு !
திண்டுக்கல் செப்.24
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கொடை ரோட்டில் உள்ள சுங்கச் சாவடியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடத்திய ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது .ஓம் பிரகாஷ் சேர்மன் விஜிலென்ஸ் துணை மேலாளர் பேசும்போது ஊழல் லஞ்சம் பற்றி PIDPI முறையில் கம்ப்ளைன்ட் பண்ணுவது எப்படி என்பதனை மனுதாரர் மனு செய்யும் போது கவர் மேல் பெயர் மற்றும் முகவரி இருக்கக் கூடாது மனு செய்யும் கவர்மேல் PIDPI என்று எழுத வேண்டும் போஸ்ட் ஆபீஸில் மட்டும் பதிவு செய்து அனுப்ப வேண்டும். ஆன்லைனில் புகார் செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் நீங்கள் கொடுக்கும் தகவல்கள் ரகசியமாக பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம் மனுதாரருக்கு ஏதேனும் பாதுகாப்பு தேவைப்பட்டால் அதற்கான பாதுகாப்பும் கொடுக்கப்படும் என்றும் விரிவாக பேசினார் .அம்மை நாயக்கனூர் பேரூராட்சி சேர்மன் செல்வராஜ் அவர்கள் பேசும் போது நாயக்கன் பட்டி முதல் கொழிஞ்சி பட்டி வரை அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன இதற்காக தனியாக சர்வீஸ் ரோடு அமைத்து தர வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார். நிகழ்ச்சி தலைமை ஏற்பவர்கள் சஞ்சீவ் சர்மா ஊழல் கண்காணிப்பு பொது மேலாளர் அவர்கள் அஜய்பிஷ்னொய் மதுரை மண்டல அலுவலர் அவர்கள் கொடைnரோடு சுங்கச்சாவடி டோல் மேனேஜர் மணிகண்டன் வார்டு கவுன்சிலர் குண சீல ஆரோக்கிய மேரி திட்ட மேலாளர் வசந்தராவ் வருவாய் மேலாளர் கொடைரோடு சுங்கச்சாவடி சஞ்சய் மகந்தி மற்றும் பாலமுருகன் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஊழல் கண்காணிப்பு பற்றிய பேசிய சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் ப்ரொஜெக்டர் மேனேஜர் நாகராஜ் அவர்கள் நன்றியை கூறினார்

About neWsoFtTAmilNADu