ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு !
டெல்லி. நவ.1
தமிழ்நாடு அரசு இந்திய அரசியல் அமைப்பின் 32வது பிரிவின் படி தமிழக ஆளுநர் மீது வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இந்திய அரசியல் அமைப்பு 32வது பிரிவு என்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிச் செயல்படுவது, செயலற்ற தன்மை, புறக்கணிப்பு மற்றும் தாமதம் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! என்ன காரணம்?
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவதில் காலம் தாழ்த்துவதாக தமிழ்நாடு ஆளுநர் மீது தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து உள்ளது. தமிழக சட்டசபை மற்றும் அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசாணைகளை அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், “தமிழ்நாடு அரசு இந்திய அரசியல் அமைப்பின் 32வது பிரிவின் படி தமிழக ஆளுநர் மீது வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இந்திய அரசியல் அமைப்பு 32வது பிரிவு என்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிச் செயல்படுவது, செயலற்ற தன்மை, புறக்கணிப்பு மற்றும் தாமதம் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களைத் தமிழக ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி அதனைப் பல மாதங்களாக நிலுவையில் வைத்து இருப்பது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது மற்றும் தவறான அதிகாரத்தைப் பயன்படுத்துவது ஆகும்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பியும் 12 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகவும், பரிசீலனைக்காகவும் காத்திருக்கின்றன. அவற்றில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி அனுப்பிய மசோதாவும் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மிகவும் அவசியமான விவகாரங்களில் ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது. தனது அதிகாரத்தையும் பொறுப்பையும் ஆளுநர் துஷ்பிரயேகம் செய்கிறார் என்பதாக மாறுகிறது.
தமிழக மக்களின் உரிமைகளை ஆளுநர் பறிக்கிறார். ஆளுநரின் செயலற்ற தன்மை மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையே முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஆளுநர் தடையாக இருக்கிறார். சிபிஐ விசாரணை உள்ளிட்டவற்றிற்கு உத்தரவிட மறுக்கிறார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன பரிந்துரையை முறையான விளக்கமின்றி நிராகரித்திருக்கிறார்.
பேரறிவாளன் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் மெத்தன போக்கை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது.
நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள தமிழக அரசு, குறிப்பிட்ட காலத்திற்குள் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளது.
எடுக்கக்கோரிய கோப்புகள்
2022 அக்டோபர் 27, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் செய்யும் மசோதா
நீண்டகாலமாக சிறையில் உள்ள 49 பேர் விடுதலை தொடர்பாக, அனுப்பப்பட்ட தமிழக அரசின் அரசாணை ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கிறது
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என்பது உள்ளிட்ட 19 மசோதாக்கள் அரசால் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Check Also
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் …