அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற வீரருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டு!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது . இந்த ஜல்லிக்கட்டில் 825 காளைகளும், 303 மாடுபிடி வீரர்கள் களம்கண்டனர்.
26 காளைகளை பிடித்து முதல் இடத்தை பிடித்த மாடுபிடி வீரர் சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர்க்கு முதல் பரிசு ரூ. 7 லட்சம் மதிப்பிலான நிசான் மேக்னட் கார், பாசுமாடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக துணைச் செயலாளர் ஸ்டாலின் அவர்கள் முதல் பரிசு பெற்ற அபி சித்தரை நேரில் வாழ்த்து தெரிவித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது