Breaking News

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு !

புதிய மருத்துவக் காப்பீடு குறித்த குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
விருதுநகர் செப்.27

விருதுநகர் மாவட்டம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு குறித்த குறைதீர்க்கும் கூட்டம்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக் கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் பொருட்டும், மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த குறைதீர்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நாளை 27.09.2023 அன்று பிற்பகல் 03.30 மணியளவில் நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது விருதுநகர், இணை இயக்குநர், மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம்; மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் மேற்படி கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

About neWsoFtTAmilNADu

Check Also

சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம்.நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது …