தேனி மாவட்டம் அகமலை ஊராட்சி மலைவாழ்மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி, தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு .
தேனி மாவட்டம், போடி தாலுகா, அகமலை ஊராட்சியில் மலைவாழ் மக்கள்,வசிக்கும்
கிராம மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டியும்,
இடம் தேர்வு செய்து வீடு கட்டித்தர வேண்டி கோரிக்கை மணு வின் அடிப்படையில்,பலமுறை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம், இடத்தை கள ஆய்வு செய்து, இடத்தை நேரில் பார்வையிட்டும், தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர், அவ் இடத்தை வீடு கட்ட எடுத்துக் கொள்வதற்கு சுய உறுதிமொழி ஆவணம் செய்து தந்து விட்ட நிலையிலும்,
அரசு அதிகாரிகள் கேட்ட, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், குடிசை வீட்டு புகைப்படம், முதலான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்த பிறகு சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் உள்ளதாகவும், பல முறை பார்வையிட்ட பிறகும், இடம் தேர்வு செய்து, பட்டா வழங்கி, வீடு கட்டித்தர, அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாகவும்,
ஊராட்சியில் பல்வேறு இன மக்கள் வாழும் மூன்று கிராமங்கள் இருக்கும் நிலையில், அதில் சொக்கன் மலை பகுதி மக்கள் 36 நபர்களுக்கு, வீடு கட்டி தந்து விட்டனர். ஆனால்,அகமலை கிராமத்தில் உள்ள 37 குடும்பங்களுக்கு, வீடு கட்டி தராமல், அரசு அதிகாரிகள் பாகுபாடு பார்ப்பதாகவும், வீடு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வீடு கட்டித் தந்து உதவிட வேண்டும் என கூறி, மலைவாழ் மக்களின் தலைவர் மாரியப்பன் தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியாரிடம் மனு அளித்தனர்.
Check Also
நீலகிரி யானை வழித் தடங்களில் கட்டப்பட்டுள்ள 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உரிமையாளர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் …