Breaking News

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் !

புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு, அமைச்சரவை ஒப்புதலுடன், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கு அனுப்பினார். இதனால், இந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. தமிழகம் போல புதுச்சேரியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன. சுமார் இரு ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநர் தமிழிசையும் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ரங்கசாமியை கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்து கோப்பு தயாரித்து துணை நிலை ஆளுநர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு . 10 இந்த ஆண்டே அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் 37, பல் மருத்துவம் 11, கால்நடை 4 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.

About neWsoFtTAmilNADu

Check Also

தமிழக மக்களுக்கு நாமம் போட்ட மத்திய பட்ஜெட்டை கண்டித்து காதில் பூக்களை சுற்றி கோவிந்தா கோவிந்தா என திராவிட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் !

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப் பட்டுப் போவீர்கள்  – பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் …