விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் பொறுப்பில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக் தியார் அலி திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் .
அதேபோல் அமைச்சரின் மருமகன் ரிஸ்வான் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினர் மீது திமுக தலைமைக் கழகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . ஆகையால் திமுக தலைமைக் கழகம் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.