Breaking News

அதிமுக ஆட்சி ஊழலால் ஐடி நிறுவனத்தை மூடி
பிளாட்பார்ம் இல் தங்குறேன்..
கோடீஸ்வரரின் ரத்த கண்ணீர்

அதிமுக ஆட்சி ஊழலால் ஐடி நிறுவனத்தை மூடி
பிளாட்பார்ம் இல் தங்குறேன்..
கோடீஸ்வரரின் ரத்த கண்ணீர்
2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் ஊழல் காரணமாக 100 பேருக்கும் மேல் பணிபுரிந்து வந்த தனது ஐடி நிறுவனத்தையே மூடி தற்போது வீடு இன்றி பிளாட்பார்முக்கு வந்துவிட்டதாக தொழிலதிபர் வேதனை தெரிவித்து முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, “2016 இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். 2019 இல் உயர்நீதிமன்றம் சென்று முறையிட்டேன், கனம் நீதிபதி அவர்கள் என்னை இரண்டு பெட்டிஷன் பதிவு செய்ய சொன்னார். மிக மோசமான நிதி நிலவரம் காரணமாகவும், கொரோன காரணமாகவும் திரும்ப செல்ல இயலவில்லை. அது விபரம் கீழே கொடுத்துள்ளேன்.
எங்கள் மென் பொருளால் அகில இந்தியாவுக்கே பெருமை சேர்த்தோம், டிஜிட்டல் இந்தியா பாராட்டினார்கள். 2019இல் பிரதம மந்திரிக்கு இந்த ஊழல் குறித்து மனு அனுப்பினேன். அதுவும் டெல்லியில் இருந்து அண்ணாநகர் K4 காவல்நிலையம் வந்தது. என்னை கண்டுபுடிக்க முடியவில்லை என மனுவை திருப்பி அனுப்பினார்கள். 2021 இல் முதலமைச்சர் தனிப்பிரிவில் இது சம்பந்தமாக மனு கொடுத்தேன். பப்ளிக் சீக்ரெட பிரிவுக்கு அனுப்புகிறோம், இதற்க்கு நம்பர் தரமாட்டோம் என்றார்கள். 50துக்கும் மேற்பட்ட தடவைகள் அங்கு சென்றேன். ஆறு மாதங்களுக்கு முன் திடீரென ஒருநாள் SBCID காவல்துறை அதிகாரிகள் வீடு தேடி வந்தார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.உங்கள் முதலமைச்சர் மனு பற்றிய உண்மை தன்மை விசாரிக்க வந்துள்ளோம் என்று விசாரணை சில நாட்கள் நடத்தினார்கள். நாங்கள் ரிப்போர்ட் அனுப்பிவிட்டோம், சில நாட்களில் உங்களுக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரும் என்று சொன்னார்கள். இன்றுவரை எந்த அழைப்பும் வரவில்லை. சென்ற வாரம் கூட முதல்வர் தனிப்பிரிவு தலைமை அதிகாரி திரு ராமப்ரதீபன் அவர்களை சந்தித்தேன். ஒரு நல்ல அதிகாரி, எப்பொழுதும் அமர சொல்லி ஒரு அரைமணி நேரமாவது பேசுவார். தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். அவரும் என்னுடைய மனு முதல்வருக்கு கொண்டு செல்ல வாய்ப்பு இல்லை என சொல்லிவிட்டார்.
பலரும் சொன்னார்கள் நீங்கள் எப்பிடியாவது முதலமைச்சர் செல்லும் வழியில் மறித்து மனு அவரிடம் நேரடியாக மனு கொடுங்கள் என்றார்கள். நானும் என் மகளும் முயற்சித்தோம். எங்கு சென்றாலும் காவல்துறை அதிகாரிகள் எங்களை எளிதாக கண்டுபுடித்து தடைப்பண்ணி விடுகிறார்கள். அதிலும் படு தோல்வியே. யாரும் வேலை கொடுக்க தயங்குகிறார்கள். தொழில் செய்ய முதலீடு இல்லை. ஓட்டுநர் உரிமம் பெற பணம் கார் இல்லை. மீண்டும் உயர்நீதிமன்றம் சென்றால் அங்கும் பணம் எதிர்பார்க்கிறார்கள், நம்பமுடியாத உண்மை. அது ஒரு தனி கதை. The HC filing section is horrible. நீதிபதிகளுக்கு தெரியவேண்டிய உண்மை.

கடுமையான கடன் பிரச்னைகள், உடல்நலம் குன்றிய மனைவி மகளுக்கு மருத்துவம் பண்ண பணம் இல்லை, வீட்டு வாடகை கொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்ட சூழ்நிலை, இன்னும் பல பிரச்சினைகள், இருந்தாலும் இன்று வரை சமாளித்து வந்தேன். அனால் இப்பொழுது வீதிக்கு தள்ளப்பட்டுள்ளேன். உண்மை அதுவே. நான் நன்கு வாழ்ந்த அதே சென்னை அண்ணாநகரில் இப்பொழுது டவர் பார்க் அருகில் நடைபாதையில் வாழுகிறேன்.

ஆனாலும் Fight for Justice அண்ட் Never Give Up என்ற முறையில் நான் இதை ஒரு பெருமையாகவே கருதுகிறேன். இதை வாசிக்கும் நீங்கள் எனக்கு மூன்று விதத்தில் உதவலாம். ஒன்று, நான் இன்னும் நம் முதல்வர் மேல் நம்பிக்கையாக இருக்கிறேன். நீங்கள் அவருடைய கவனத்திற்கு கொண்டு வர உதவலாம். ரெண்டு. உயர்நீதிமன்ற நீதிபதிகள் யாராவது ஒருவர் கவனத்திற்கு கொண்டு வரலாம். மூன்று. நீங்கள் நேரில் வந்து எனக்கு ஒரு book வாங்கி தரலாம். சமூகநீதி உங்கள் ஆதரவுக்கு நன்றி.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

About neWsoFtTAmilNADu

Check Also

12 மணி நேரம் வேலை ! சரியா!? தவறா !?வாரத்தில் நான்கு நாட்கள் தலா 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு எடுத்தால் என்ன பிரச்சனை?

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை என்று மசோதா கொண்டுவந்தது . சரியா!? தவறா!?2020 ஆம் ஆண்டில் ஒரு …